கோலாலம்பூர், அக்டோபர்.15-
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல், வர்த்தக வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, 20,000 ஆக உயர்ந்துள்ளது என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை, வர்த்தக வாகன இயக்குநர்களிடையே பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வைக் காட்டுகிறது என்றும் ஜேபிஜே குறிப்பிட்டுள்ளது.
அமலாக்கம் தொடங்கிய 10 நாட்களிலேயே சான்றிதழ் பெற வந்த வாகனங்களின் எண்ணிக்கை 3,000-த்தில் இருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஜேபிஜே தெரிவித்துள்ளது.
அதே வேளையில், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஜேபிஜே எச்சரிக்கை விடுத்துள்ளது.








