மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் லஞ்ச ஊழல் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், முழு வீச்சில் லஞ்ச ஊழலை வேரறுக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது என்று தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலில், யார் ஈடுப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் பாயும் என்பதையே இந்நடவடிக்கை காட்டுவதாக ஃபாமி ஃபட்ஸில் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர் நடப்பு அரசாங்கத்தில் ஓர் அங்கமாக வீற்றிருந்த போதிலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே மடானி அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ஃபாமி ஃபட்ஸில் விளக்கினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


