May 21, 2026
Thisaigal NewsYouTube
கார் தீவிபத்தில் மலேசிய நடிகர் ராய் அஸ்மான் மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கார் தீவிபத்தில் மலேசிய நடிகர் ராய் அஸ்மான் மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினர்

Share:

மலேசிய நடிகர் ரோய் அஸ்மான் மற்றும் அவரின் குடும்பத்தினர் பயணித்த கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

நவம்பர் 3 ஆம் தேதி சிலாங்கூர், புன்சாக் அலாம் - மிலிருந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராமல் காரிலிருந்து தீ வருவதை கண்டு பதறி காரை விட்டு இறங்கியதாக காணொளி ஒன்றை ரோய் அஸ்மான் வெளியிட்டிருந்தார்.

மனைவி, கடைசி பிள்ளை மற்றும் 53 வயதுடைய நடிகர் ரோய் அஸ்மான் கடவுளின் அருளால் உயிர் தப்பித்ததாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வேளையில் தம் நண்பர்களுக்கும் உதவி புரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Related News