கோலாலம்பூர், ஜூலை.26-
அமெரிக்காவிற்கான மலேசியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷாருல் இக்ராம், தமது நியமனக் கடிதத்தை அதிபர் டொனால்டு டிரம்பிடம் ஒப்படைத்தார்.
கடந்த ஜுலை 24 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, மலேசியாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருவழி உறவை வலுப்படுத்துதற்கான தனது உறுதிப்பாட்டையும் ஷாருல் இக்ராம் தெரிவித்து.
அதிபர் டொனால்டு டிரம்பிடம், மலேசியத் தூதருக்கான நியமனக் கடிதத்தை ஷாருல் இக்ராம் ஒப்படைக்கும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களை வாஷிங்டனில் உள்ள மலேசியத் தூதரகம் இன்று தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளது.
புதிய தூதர் ஷாருல் இக்ராமுக்கு அமெரிக்க அதிபர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








