May 24, 2026
Thisaigal NewsYouTube
அந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

அந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Share:

கிள்ளான் , ஆகஸ்ட் 25-

சமூக வலைத்தளங்களிர் பகிரப்பட்டு வருவதைப் போன்று கோலக்கிள்ளான்,ஜாலான் கெம் சாலையில் சில வாகனங்கள் எதிர்திசையில் செலத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வாகனங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

அந்த வாகனங்கள்ஜாலான் லெபுஹ் ராஜா லுமு-விலிருந்து ஜாலான் கெம் சாலை சந்திப்பு வரையில் எதிர்திசையில் மிக ஆபத்தான் முறையில் செலுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஜாலான் பெலபுஹான் பராத் டிலிருந்து ஜாலான் பெலபுஹான் உதாரா- விற்கு செல்லும் ஜாலான் பிண்டாசன் சாலையில் ஒரு டிரெய்லர் லோரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தினால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலில் சிக்குவதிலிருந்து தவிர்க்க சம்பந்தப்பட்ட வாகனங்கள், வழித்தடம் மாறி, எதிர்திசையில் சென்றுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News