கப்பாளா பாத்தாஸ், ஆகஸ்ட்.04-
தன்னிடம் பரிசோதனைக்கு வந்த பெண் நோயாளிகளிடம் ஆடையைக் களையச் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் பினாங்கைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தொடர்புடைய விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் மறுசமர்ப்பிப்பு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண் நோயாளிகளிடம் வக்கிரப் பார்வையுடன் பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அந்த மருத்துவர் குறித்து பல்வேறு புகார்களைப் பெற்ற போலீசார் நான்கு முறை கைது செய்துள்ளனர்.
அந்த மருத்துவர் இன்னும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாதது குறித்து மகளிர் அமைப்புகள் கேள்வி எழுப்பி வரும் வேளையில், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கைக்கு பதிலாக மேலும் சில உள்ளடக்கங்களுடன் மற்றோர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.








