சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் 10 பேர் உயிரிழந்த பீச்கிராஃப்ட் 390 பிரீமியர் 1 ரக ஜெட் விமான விபத்தில் நொறுங்கிய பாகங்களை விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும், அமெரிக்காவின் வான் போக்குவரத்து நிபுணர்களும் ஆராயவுள்ளனர். விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு விமானத்தின் சிதைந்தப் பாகங்கள் முக்கிய ஆதாரப் பொருட்களாக பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இந்த புலனாய்வு முற்றுப்பெறும் வரையில் சம்பவ இடத்தில் 24 மணி நேரமும் காவல் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஏசிபி முகமது இக்பால் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


