தடுப்பு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேகப்படும் குற்றவாளிகளுக்கு எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக அந்தந்த மாநில வட்டார போலீஸ் தலைவர்கள் வாரத்திற்கு நான்கு முறை தடுப்பு காவல் சிறையைக் கண்காணிக்க செல்ல வேண்டும் என மலேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தனது அதிகாரிகளுக்கு கட்டளை விடுத்துள்ளார்.
தடுப்பு காவல் கண்காணிப்பு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் வாரம் முழுவதும் அங்குச் சென்று அன்றாட நிலவரங்களை கண்டு வர வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் தற்கொலை செய்து கொள்வது, தடுப்பு காவலில் சண்டை இட்டு கொள்வது, உடல் நலம், மற்றும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை அவப்போது கண்டறிந்து அறிக்கை போலீஸ் தலைமையகத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.








