சிபித்தாங், அக்டோபர்.16-
பள்ளி வளாகத்திற்குள் மாணவர் ஒருவரின் தாக்குதலுக்கு ஆனான மாணவி ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளானார். இந்தச் சம்பவம் இன்று காலையில் சபா, சிபித்தாங்கில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ந்தது.
அந்த மாணவியைச் சம்பந்தப்பட்ட மாணவர், இடுப்புப் பட்டையினால் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வெள்ளை நிறச் சீருடை முதல் ரத்தம் படிந்த நிலையில் அந்த மாணவி வாகனத்தில் ஏற்றப்பட்டு உடடினயாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தை சிபித்தாங் மாவட்ட போலீஸ் தலைவர் அவாங் அனாக் சுவாண்டா உறுதிப்படுத்தினார்.