Jun 16, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே
தற்போதைய செய்திகள்

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

Share:

மக்கள் மீது ஏற்படும் நேரடித் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ரொன்95 பெட்ரோல் மானிய சீரமைப்பு என்பது அரசாங்கத்தின் இறுதித் தேர்வாக மட்டுமே இருக்கும் என்று பிரதமர் அலுவலகத்தின் மூத்த பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் நுர்ஹிஷாம் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

'கெலுவார் செகெஜாப்' எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய நுர்ஹிஷாம் ஹுசைன், பெட்ரோல் விலை என்பது மக்களின் பணப்பையை நேரடியாகப் பாதிக்கும் ஒரு மிக உணர்திறன் வாய்ந்த விஷயம் என்பதால், அது தொடர்பான முடிவுகள் தள்ளிவைக்கப்படும் என்றார்.

தற்போது அரசாங்கம் லாஜிஸ்டிக்ஸ் துறையின் கீழ் உள்ள மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒதுக்கீட்டைக் கடுமையாக்குவது போன்ற மாற்றுச் சேமிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

மேலும், அடுத்த ஜூலை மாதம் வரை நாட்டிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு போதுமானதாக உள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

Related News