Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் தீவில் அழுகிய நிலையில் உடல் மீட்பு
தற்போதைய செய்திகள்

பங்கோர் தீவில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

Share:

பங்கோர் தீவில், பங்கோர் லாவோட் என்ற இடத்தில் அழுகிய நிலையில் மனித உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், அவ்வழியை கடந்தவர்கள், சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக மஞோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

நீல நிற ஜீன்ஸ், சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்த நபரிடம் எந்தவொரு அடையாளப் பத்திரமும் கண்டு பிடிக்கப்படாததால் அந்நபர் யார் என்பதில் அடையாளம் காண இயலவில்லை. அந்நபர் இரண்டு வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் நோர்டின் குறிப்பிட்டார்.

Related News