Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மூன்று தினங்களில் 90 லட்சம் ரிங்கிட் வசூலானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று தினங்களில் 90 லட்சம் ரிங்கிட் வசூலானது

கோலாலம்பூர், நவ.25-


மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாகொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்து சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை கட்டண கழிவு வழங்கும் சலுகையில் கடந்த மூன்று தினங்களில் 91 லட்சத்து 39 ஆயிரத்து 750 ரிங்கிட் வசூலானதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுப்பெற்ற இந்த சிறப்பு கட்டணக் கழிவு சலுகை வாயிலாக நாடு தழுவிய நிலையில் ஒரு லட்சத்து மூவாயிரத்து 590 சம்மன்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

32 ஆயிரத்து 500 பேர் நேரடியாக வருகை தந்து இந்த சம்மன்களுக்கு தீர்வு கண்டு இருப்பது பெருமிதம் அளிக்கிறது என்று முகமட் யுஸ்ரி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →