Aug 12, 2026
Thisaigal NewsYouTube
உள்ளாடைகளைத் திருடி வந்த நபருக்கு எதிராக போலீசார் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

உள்ளாடைகளைத் திருடி வந்த நபருக்கு எதிராக போலீசார் வலை வீச்சு

Share:

ஜார்ஜ்டவுன், மே.28-

வீடுகளின் பால்கனியில் உலற வைக்கப்படும் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்ததாக நம்பப்படு ஆடவருக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

ஆகக் கடைசியாக ஜார்ஜ்டவுன், ஜாலான் டாக்டர் வூ லியென் தே அருகில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நடந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்தார்.

கடந்த வாரம் புதன்கிழமை காலை 11 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவர், பால்கனியிலிருந்து உள்ளாடடைகளைத் திருடிக் கொண்டு இருப்பது, அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டடார்.

Related News