Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தொழிலாளர் மீது பாறை விழுந்த சம்பவம், கல்லுடைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொழிலாளர் மீது பாறை விழுந்த சம்பவம், கல்லுடைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன

மஞ்சோங், நவ. 15-

பேரா, மஞ்சோங்கில் கடந்த புதன்கிழமை, கல்லுடைப்பு குவாரிப் பகுதியில் பாறைக்கற்கள் விழுந்து தொழிலாளர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்நது கல்லுடைப்புப்பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது-

மாலை 4.45 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மண்வாரி ஓட்டுநரான 35 வயது நபர் மீது பாறைக் கற்கள் விழுந்து, சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அந்த கல்லுடைப்புப்பகுதியில் மண்வாரி இயந்திரத்தை அந்த தொழிலாளர் இயக்கிக்கொண்டு இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து கண்டறிந்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரையில் கல்லுடைப்புப்பணிளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பேரா மாநில வேலையிட சுகாதார, பாதுகாப்பு இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →