Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் நிர்வாணமாகச் சுற்றித்திரிந்த நபர் மனநலப் பிரிவில் அனுமதி
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நிர்வாணமாகச் சுற்றித்திரிந்த நபர் மனநலப் பிரிவில் அனுமதி

Share:

பினாங்கு, பாயான் லெப்பாஸ் பகுதியில் நிர்வாண நிலையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவர், போலீஸ் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ' லெபு புக்கிட் ஜம்புல்' சாலையில் ஆடைகளின்றி ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, வடகிழக்கு மாவட்ட போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையின் நடுவே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த நபரை மீட்ட போலீசார், பாதுகாப்புடன் பினாங்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அந்த நபரிடம் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவர் யார் என்பதை அடையாளம் காணவும், அவரது உறவினர்களைக் கண்டறியவும் போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் துணை போலீஸ் சூப்பரின்டென்டென்ட் லீ சுவீ சேக் தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை