Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரைகால் காற்சட்டை அணிந்ததற்காக பெண்ணுக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

அரைகால் காற்சட்டை அணிந்ததற்காக பெண்ணுக்கு அபராதம்

Share:

கிளந்தானில் பொது இடத்தில் அரைகால் சிலுவார் அணிந்த குற்றத்திற்காக பெண் வியாபாரி ஒருவருக்கு அபராதம் விதிக்கும் வகையில் சம்மன் வெளியிடப்பட்டது. கிளந்தான், கோத்தா பாருவில் வியாபாரம் செய்து வரும் 35 வயதுடைய அந்தப் பெண், அரைக்கால் சிலுவார் அணிந்து இருந்தது மூலம் நகராண்மைக்கழக விதிமுறைகளை மீறியுள்ளார் என்று கிளந்தான் நகராண்மைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் கால் தொடைகள் தெரியும் அளவிற்கு உடை அணிவதற்கு கிளந்தானில் அனுமதியில்லை. அந்தப் பெண் அணிந்துள்ள ஆடை, ஏற்புடையது அல்ல என்பதால் முஸ்லிம் அல்லாத அந்தப் பெண்ணுக்கு சம்மன் வெளியிடப்பபட்டுள்ளது என்று நகராண்மைக்கழத் தலைவர் ரொஸ்நஸ்லி அமின் தெரிவித்தார்.

Related News