நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகிக்காத நிலை ஏற்பட்ட பிறகு மலாய்க்கார சமுதாயம் ஏழையாகி விட்டது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு ஏற்ற பிறகு மலாய்க்காரர் சமுதாயத்தை எப்படியாவது உயர்த்தி விடலாம் என்று தாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாகிவிட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தம்மை வீழ்த்தியது பக்காத்தான் ஹராப்பான் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய துன் மகாதீர், தம்முடைய சிந்தனையில் மலாய்க்காரர்களின் உயர்வும், வளர்ச்சியும் என்னென்றும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்றார்.








