கோலாலம்பூர், ஜனவரி.18-
பேராக, சிம்மோர் பகுதியில் வனவிலங்குத் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, அவர்களின் எதிரே திடீரெனத் தோன்றிய மலாயா புலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிகவும் ஆபத்தான சூழலில் அமைதி காத்து அதிகாரிகள் உயிர் தப்பிய நிலையில், அந்தப் புலி பின்னர் வனவிலங்குத் துறையினரால் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.
பிடிப்பட்ட புலிக்கு உடல்நலக் குறைபாடு இருப்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதிச் செய்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது அது சுங்கை தேசிய வனவிலங்கு மீட்பு மையத்தில் தீவிர சிகிச்சையில் உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் இத்தகைய விலங்குகள் அருகில் செல்லும் போது பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனவிலங்குத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹாஷிம் கேட்டுக் கொண்டுள்ளார்.








