கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைப் போல ஆடவர் ஒருவர் , போலீசார் பயன்படுத்தும் சைரன் ஒலியை எழுப்பிக் கொண்டு, மிக ஆபாயகரமாக வாகனத்தை செலுத்தும் காட்சியைக் கொண்ட காணொளியைத் தொடர்ந்து 22 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ.அ அன்பழகன் தெரிவித்தார்.
அந்த காணொளி தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆடவரை போலீஸ் தேடுகிறது என்பதை அறிந்த அந்த நபர், நேற்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சரண் அடைந்ததாக அன்பழகன் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை,ஸ்ரீ கெம்பாங்கான், ஜாலான் செர்டாங் பெர்டானாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர் பயன்படுத்திய கார், போர்ட்டிக்சனில் உள்ள தனது நண்பரின் தாயாருக்கு சொந்தமானதாகும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.நெகிரி செம்பிலான், நீலாயைச் சேர்ந்த அந்த ஆடவர் பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வாக்குமுலப் பதிவுக்கு பிறகு அந்த ஆடவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அன்பழகன் மேலும் விவரித்தார்.







