Mar 25, 2026
Thisaigal NewsYouTube
இஷா மரணம தொடர்பில் விளக்கமளிக்க இஸ்பெக்டர் உட்பட இருவர் அழைப்பு
தற்போதைய செய்திகள்

இஷா மரணம தொடர்பில் விளக்கமளிக்க இஸ்பெக்டர் உட்பட இருவர் அழைப்பு

Share:

சிலாங்கூர்,ஜூலை 21-

இணைய பகடிவதையால் தற்கொலை செய்துக் கொண்ட TIKTOK INFLUENCER ESHA-வின் மரணம் தொடர்பில் INSPECTOR பதவி வகிக்கும் பெண்மணி உட்பட இருவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் விளக்கமளிக்க அவர்கள் இருவரும் இன்னும் முன்வரவில்லை என SENTUL மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Sukarno Mohd Zahari தெரிவித்தார்.

மேலும் இதுவரை இருவரிடம் இருந்து மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக தற்கொலைக்கு தூண்டும் வகையில் ESHA-வை பற்றி அவதூறுகளை பரப்பியதாக, அவரது தாயார் Puspa P Rajagopal மூவர் மீது புகார் அளித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர்களில் இருவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Related News