கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ரிம 343,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் தெரிவித்துள்ளார்.

கூலாய், பண்டார் புத்ரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர விழாவில் கலந்துகொண்ட அவர், சமூக வளர்ச்சி மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க அரசு தொடர் ஆதரவு வழங்கும் எனக் கூறினார்.
மேலும், இப்பகுதியில் உள்ள நான்கு தமிழ்ப்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த கடந்த 2022 முதல் இதுவரை ரிம 487,687 நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.









