Jan 26, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்கள் இனி “கூலிம் ஸ்மார்ட் கேர்” மூலம் புகார்கள் செய்யலாம்
தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் இனி “கூலிம் ஸ்மார்ட் கேர்” மூலம் புகார்கள் செய்யலாம்

Share:

கூலிம், ஜனவரி.26-

கூலிம் மாவட்ட மக்கள் இனி அவர்களின் புகார்களை "கூலிம் ஸ்மார்ட் கேர்” எனும் ஆப்ஸ் மூலம் விரைவாகவும் எளிய முறையிலும் செய்யலாம். அத்துடன் இனி கடிதம் மூலமாக எவ்விதமான புகார்களை மக்கள் செய்ய அவசியமில்லை என்று கூலிம் நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹேல்மி பின் யூசோப் தெரிவித்தார்.

கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் இந்த "கூலிம் ஸ்மார்ட் கேர்”விண்ணப்பம், கூலிம் மாவட்ட தொழில்நுட்பத்தை வளர்ச்சியை நோக்கிச் செல்வதைக் குறிக்கின்றது. இந்த நவீன விண்ணப்பத்தை கூலிம் மாவட்ட மக்களுக்காக அறிமுகப்படுத்திருப்பதாக டத்தோ ஹேல்மி கூறினார்.

கூலிம் சென்டர் பேரங்காடியில் கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்ட டத்தோ ஹேல்மி பின் யூசோப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .

“கூலிம் ஸ்மார்ட் கேர்” என்றால் என்ன? கூலிம் மாவட்டத்தில் விதிமுறைகளுக்குப் புறம்பாக அல்லது தனிநபர்களின் தவறான செயல்முறைகளை மக்கள் கவனித்தால் உடனடியாக "கூலிம் ஸ்மார்ட் கேர்" செயலி மூலம் புகார்களைச் செய்யலாம். இப்பொழுது உள்ள AI தொழில்நுட்பத்தைக் கொண்டு அப்புகார்களை அடையாளம் காண முடியும் என்றார் டத்தோ ஹேல்மி.

மேலும், இந்த கூலிம் ஸ்மார்ட் கேர் ஆப்ஸ் திட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அரசாங்க இலாகாக்கள் இணைந்துள்ளன. உதாரணமாக காவல்துறை, சுகாதார இலாகா, மாவட்ட நில இலாகா என இன்னும் பல இலாகாக்கள் இருக்கின்றன. கூலிம் ஸ்மார்ட் கேர் மூலம் பெறப்படும் புகார்களை முதலில் விரிவாக விசாரித்தப் பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுடன், அப்புகார்கள் நகாரண்மை கழகம் சார்ந்ததா அல்லது வேறு இலாகாவைச் சார்ந்ததா என்று கலந்தாலோசித்தப் பின் சம்பந்தப்பட்ட இலாகாவிடம் ஒப்படைக்கப்படும் என்றார் டத்தோ ஹேல்மி பின் யூசோப் .

இதற்கிடையில், இந்நிகழ்வில் கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்தின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழாவின் சின்னத்தை அதிகாரப்பூர்வமாகவும் அறிமுகம் செய்து வைத்தார் டத்தோ ஹேல்மி பின் யூசோப்.

Related News