சரவாக் மாநிலம் சிரியான் பகுதியில் காற்றின் தரக் குறியீடு இன்று காலை 7 மணியளவில் 495 ஆக உயர்ந்தது.
இது 500 என்ற அவசரநிலை அறிவிக்கப்படும் அளவை நெருங்கியுள்ளது.
எனினும், காலை 9 மணி நிலவரப்படி, சுற்றுச்சூழல் துறையின் எ.பி.ஐ இணையதளத்தில், சிரியான் காற்றுத் தரம் குறித்த புதிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
என்றாலும், மாநிலத்தில் எந்தப் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 500-ஐ எட்டினாலும், மாவட்ட அளவில் ஹேஸ் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை அறிவிக்கப்படும் என சரவாக் மாநில துணை முதல்வர் டக்ளஸ் உக்கா எம்பாஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








