Sep 4, 2026
Thisaigal NewsYouTube
விமானி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: விநியோகஸ்தர்களாகச் செயல்பட்ட மேலும் 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

விமானி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: விநியோகஸ்தர்களாகச் செயல்பட்ட மேலும் 6 பேர் கைது

Share:

இந்தோனேசியாவின் சுகார்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 39 வயது மலேசிய விமானி தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மேலும் ஆறு உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விமானியிடம் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ உசேன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 11 முதல் 15-ஆம் தேதி வரை புக்கிட் அமானைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஜாகார்த்தா சென்று விமானியிடம் விசாரணை நடத்தியிருந்தது.

அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20 முதல் 28-ஆம் தேதி வரை புக்கிட் அமான் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 23 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 6 பேரும் அந்த விமானிக்குப் போதைப்பொருட்களை வழங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் கடத்தல் நபர்களாக செயல்பட்டதாக உசேன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆறு பேரும் 1985 அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

தேசிய வளர்ச்சித் திட்டத்தில் இந்திய சமூகத்தினர் ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் / பிரதமர் அன்வார் உறுதி

தேசிய வளர்ச்சித் திட்டத்தில் இந்திய சமூகத்தினர் ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் / பிரதமர் அன்வார் உறுதி

பாஸ் வென்ற தொகுதிகளை மீண்டும் தக்கவைக்க வேண்டும் – கட்சித் தலைவர்களுக்கு ஹாடி அவாங் வலியுறுத்து

பாஸ் வென்ற தொகுதிகளை மீண்டும் தக்கவைக்க வேண்டும் – கட்சித் தலைவர்களுக்கு ஹாடி அவாங் வலியுறுத்து

1.7 பில்லியன் வரி பாக்கி வழக்கு: நஜிப், மகன் நஜிஃபுதின் மீதான திவால் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

1.7 பில்லியன் வரி பாக்கி வழக்கு: நஜிப், மகன் நஜிஃபுதின் மீதான திவால் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

பினாங்கில் ஆடவர் மீது துப்பாக்கிச் சூடு - இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

பினாங்கில் ஆடவர் மீது துப்பாக்கிச் சூடு - இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

சரவாக் சிரியானில் காற்றின் தரக் குறியீடு 495-ஐ எட்டியது - அவசரநிலை அறிவிக்கப்படும் வாய்ப்பு

சரவாக் சிரியானில் காற்றின் தரக் குறியீடு 495-ஐ எட்டியது - அவசரநிலை அறிவிக்கப்படும் வாய்ப்பு

கெடாவில் இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

கெடாவில் இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு