சபா, கெனிங்காவில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் கெனிங்காவ் மக்கள் பீதியில் உறைந்தனர்.
இன்று காலை 9.31 மணியளவில் ஏற்பட்ட 3.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு, கெனிங்காவ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த பலர், உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில், மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி, வெளிப்புறங்களில் பாதுகாப்பான இடங்களில் கூடி நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட் மலேசியா வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையம் கெனிங்காவுக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது.
இந்த அதிர்வால் இதுவரை சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலநடுக்கத்தின் தாக்கத்தை மெட் மலேசியா தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் தங்களது அனுபவங்களைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்ப








