Sep 3, 2026
Thisaigal NewsYouTube
2021இல் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22 முறை நடத்தப்பட்ட முடிவு அமைச்சரவையின் கூட்டு முடிவு — தெங்கு ஸஃப்ருல்
தற்போதைய செய்திகள்

2021இல் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22 முறை நடத்தப்பட்ட முடிவு அமைச்சரவையின் கூட்டு முடிவு — தெங்கு ஸஃப்ருல்

Share:

ஆண்டுக்கு 22 முறை சிறப்பு லாட்டரி குலுக்கல்களை நடத்த அனுமதித்த முடிவு, தமது தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், அப்போது அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த பாஸ் அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவையின் கூட்டு முடிவு என்றும் முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 1999ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருப்பதாகக் கூறிய அவர், தாம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே தேசிய முன்னணி ஆட்சியில் ஆண்டுக்கு 22 குலுக்கல்கள் என்ற வரம்பு இருந்ததாகத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அப்போதைய அரசாங்கம் அந்த 22 குலுக்கல்கள் என்ற வரம்பை மீண்டும் நடைமுறைப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்துக்கு அதிகாரப்பூர்வ பதில் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தம்மை தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டிய பாஸ் இளைஞர் அணித் தலைவர் பிர்ஃதாவுஸ் நவி - யின் கருத்துக்கு பதிலளித்த தெங்கு ஸஃப்ருல், தற்போது மடானி அரசாங்கத்தின் கீழ் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் ஆண்டுக்கு எட்டு முறை மட்டுமே நடத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

Related News

நிலநடுக்கத்தால் குலுங்கிய கெனிங்காவ் — பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

நிலநடுக்கத்தால் குலுங்கிய கெனிங்காவ் — பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 1,252 ஆக உயர்வு — 4,216 பேர் தொடர்ந்து காணவில்லை

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 1,252 ஆக உயர்வு — 4,216 பேர் தொடர்ந்து காணவில்லை

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் — Saifuddin Nasution தகவல்

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் — Saifuddin Nasution தகவல்

பினாங்கில் குடிநீர் கட்டணம், நில வரியை உயர்த்துவதை ஒத்திவைக்க வேண்டும் — லிம் குவான் எங்

பினாங்கில் குடிநீர் கட்டணம், நில வரியை உயர்த்துவதை ஒத்திவைக்க வேண்டும் — லிம் குவான் எங்

தென் தாய்லாந்து ஆயுதக் குழுவினருக்கு மலேசியா அடைக்கலம் அளிக்காது — சைஃபுதீன் நசுத்தியோன்

தென் தாய்லாந்து ஆயுதக் குழுவினருக்கு மலேசியா அடைக்கலம் அளிக்காது — சைஃபுதீன் நசுத்தியோன்

மரம் விழுந்ததால் கே.டி.எம் கொமுட்டர், இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இடையூறு

மரம் விழுந்ததால் கே.டி.எம் கொமுட்டர், இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இடையூறு