Sep 3, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்ததால் கே.டி.எம் கொமுட்டர், இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இடையூறு
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்ததால் கே.டி.எம் கொமுட்டர், இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இடையூறு

Share:

தண்டவாளப் பகுதியில் மரம் விழுந்ததைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு கே.டி.எம் கொமுட்டர் மற்றும் இ.டி.எஸ் ரயில் சேவைகளில் இன்று இடையூறு ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலின்படி, மரம் விழுந்ததில் ரயில் பாதையுடன் தொடர்புடைய மேல்நிலை மின்கம்பி அமைப்பும் பாதிக்கப்பட்டதால் சேவைகள் தாமதமடைந்துள்ளன.

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கே.டி.எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கெப்போங்கிற்கும், ரவாங்கிற்கும் இடையில் ரயில் இருப்புப்பாதையில் மரம் விழுந்ததில் ரயில் பாதையுடன் தொடர்புடைய மேல்நிலை மின்கம்பி அமைப்பும் பாதிக்கப்பட்டதால் சேவைகள் தாமதமடைந்துள்ளன.

இதன் காரணமாக சில ரயில் பயணங்கள் 60 நிமிடங்களுக்கு மேல் தாமதமானதாக அது குறிப்பிட்டுள்ளது. .

கே.டி.எம்.பி தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை அகற்றி, மின்சார அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயணிகள் தங்களது பயணத்திற்கு முன் கே.டி.எம்.பி-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் சமீபத்திய தகவல்களைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related News

நிலநடுக்கத்தால் குலுங்கிய கெனிங்காவ் — பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

நிலநடுக்கத்தால் குலுங்கிய கெனிங்காவ் — பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 1,252 ஆக உயர்வு — 4,216 பேர் தொடர்ந்து காணவில்லை

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 1,252 ஆக உயர்வு — 4,216 பேர் தொடர்ந்து காணவில்லை

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் — Saifuddin Nasution தகவல்

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் — Saifuddin Nasution தகவல்

2021இல் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22 முறை நடத்தப்பட்ட முடிவு அமைச்சரவையின் கூட்டு முடிவு — தெங்கு ஸஃப்ருல்

2021இல் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22 முறை நடத்தப்பட்ட முடிவு அமைச்சரவையின் கூட்டு முடிவு — தெங்கு ஸஃப்ருல்

பினாங்கில் குடிநீர் கட்டணம், நில வரியை உயர்த்துவதை ஒத்திவைக்க வேண்டும் — லிம் குவான் எங்

பினாங்கில் குடிநீர் கட்டணம், நில வரியை உயர்த்துவதை ஒத்திவைக்க வேண்டும் — லிம் குவான் எங்

தென் தாய்லாந்து ஆயுதக் குழுவினருக்கு மலேசியா அடைக்கலம் அளிக்காது — சைஃபுதீன் நசுத்தியோன்

தென் தாய்லாந்து ஆயுதக் குழுவினருக்கு மலேசியா அடைக்கலம் அளிக்காது — சைஃபுதீன் நசுத்தியோன்