லாஹாட் டாத்து, செப்டம்பர்.01-
ஹோட்டல் ஒன்றில் தனித்து வாழும் மாதுவுடன் உறவில் இருந்ததாக நம்பப்படும் திருமணமான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சபா, லாஹாட் டாத்துவில் இஸ்லாமிய சமய அதிகாரிகள், ஹோட்டல் ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அலங்கோல நிலையில் காணப்பட்ட அந்த மாதுவும், ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 60 அறைகள் சோதனையிடப்பட்டதாக சமய அதிகாரி மார்டி அரிஃபின் தெரிவித்தார்.








