Jun 17, 2026
Thisaigal NewsYouTube
விசாவை  தவறாகப் பயன்படுத்திய 62 வெளிநாட்டவர்கள் சிலாங்கூரில் கைது
தற்போதைய செய்திகள்

விசாவை தவறாகப் பயன்படுத்திய 62 வெளிநாட்டவர்கள் சிலாங்கூரில் கைது

Share:

சிலாங்கூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடி சோதனையில், தங்களின் t விசாவை தவறாகப் பயன்படுத்தி வேலை செய்த 62 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தகவலின் பேரில், திங்கட்கிழமை அன்று மரச்சாமான்கள், பலகைத் தொழிற்சாலைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் உட்பட 17 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 210 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த 62 பேர் சட்டவிரோதமாகப் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.

நாட்டிற்குள் நுழைந்ததற்கான அசல் நோக்கத்திற்கு மாறாக இவர்கள் செயல்பட்டது குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கடுமையான விதிமீறலாகும் என்று குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்துள்ளார். மேலும், இவர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளுக்கும் விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் புத்ராஜெயா குடிவரவு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related News