Oct 17, 2026
Thisaigal NewsYouTube

தயார் நிலையில் 7,500 தன்னார்வலர்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தயார் நிலையில் 7,500 தன்னார்வலர்கள்

வடகிழக்கு பருவமழை நேற்று நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி நிலையில் அதனை எதிர்கொள்ள சுமார் 7,500 சிலாங்கூர் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

சமூக மட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மலேசிய ஆயுதப்படையின் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றிருப்பதாக சிலாங்கூர் செயல்பாட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் சடினா சுபியான் கூறினார்.

“அனைத்து சிலாங்கூர் தன்னார்வலர்களும் தயாராகவும், துடிப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒவ்வொரு மாதமும் கூட்டங்களை நடத்துகிறோம்.

“நாளை நாங்கள் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 இல் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளோம், குறிப்பாக பேரிடர் மேலாண்மை பற்றிய தன்னார்வலர்களின் அறிவை வலுப்படுத்துவதற்காக இது அமைந்திருக்கும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →