சுபாங் ஜெயா, ஜூலை.23-
பூச்சோங், ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் நேற்று நிகழ்ந்த கைகலப்பில், உள்ளூர் ஆடவரைக் கடத்திச் சென்றதாக நம்பப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆடவர் ஒருவரைச் சில நபர்கள் பலவந்தமாகப் பிடித்து, லோரியில் ஏற்றிக் கொண்டுச் சென்றதாக மாலை 6.38 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார், தீவிரமாக விசாரணை செய்து வரும் அதே வேளையில் தேடப்பட்டு வரும் அந்த மூன்று நபர்களையும் அடையாளம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








