Jun 30, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Share:

பள்ளி விடுமுறை மற்றும் ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதால், இன்று காலை முதல் நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதீதமாகக் காணப்படுகிறது.

மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM வெளியிட்டுள்ள தகவலின்படி,

வடக்கே பெர்மாத்தாங் பாவ் முதல் சுங்கை துவா வரையிலும், தெற்கே ஜூரு ஆட்டோ சிட்டி முதல் ஜூரு டோல் வரையிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சாங்காட் ஜெரிங் முதல் கோலகங்சார் வரையிலான பகுதியிலும் நெரிசல் நீடிக்கிறது.

தெற்கே, செனாய் உத்தாரா முதல் கூலாய் குலாய் வரையிலும், புத்ரா மஹ்கோத்தா முதல் நீலாய் உத்தாரா வரையிலும் போக்குவரத்து மந்தமாக உள்ளது.

சிங்கப்பூர் – ஜோகூர் இடையிலான காஸ்வே பாலத்தின் இருபுறங்களிலும், அதாவது வுட்லண்ட்ஸ் முதல் சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று LLM தெரிவித்துள்ளது.

Related News