Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் தாக்கப்பட்ட சம்பவம், ஐவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் தாக்கப்பட்ட சம்பவம், ஐவர் கைது

குவாந்தன்,செப்டம்பர் 06-

குவந்தானில் குதிரை லாயம் ஒன்றில் ஆடவர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் ஐவரை கைது செய்துள்ளனர். எனினும் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பகாங் அரச பேராளர் ஒருவர், கும்பல் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து தம்மைத் தாக்கியதாக 44 வயது அவாங் அலியாஸ் என்பவர் பகிரங்கமாக ஊடகப்பேட்டியில் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த ஐவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், போலீசிலும் புகார் செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் கடந்த ஜுன் மாதம் நடந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் யாரையும் தற்காக்கப் போவதில்லை என்று பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா சுல்தான் அப்துல்லா நேற்று அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →