Sep 7, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா நீர் சறுக்கு விளையாட்டில் விபத்து: இரு பெண்கள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

மலாக்கா நீர் சறுக்கு விளையாட்டில் விபத்து: இரு பெண்கள் படுகாயம்

Share:

மலாக்கா மாநிலம், ஆயர் கெரோவில், நீர்ச் சறுக்கு விளையாட்டில் ரப்பர் படகு மோதியதில், இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் 46 வயது பெண்ணின் தலையில் இரத்தக் கட்டி ஏற்பட்டதுடன், 31 வயது பெண் மூளையதிர்ச்சிக்கு ஆளானார்.

இருவரும் குடும்ப உறுப்பினர்களுடன் விடுமுறைக்காக வந்திருந்த நிலையில், ரப்பர் படகில் பயணித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் ஹலிம் அபாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், படகு கீழே வந்த போது ஏதோ ஒன்றில் மோதியதில், ஒருவரின் தலை சுவரில் பலமாக மோதியதாக கூறப்படுகின்றது.

இந்த மோதலில் இருவரும் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹலிம் அபாஸ் குறிப்பிட்டுள்ளார்

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து