Aug 26, 2026
Thisaigal NewsYouTube
தென் தாய்லாந்தில் பதற்ற நிலை: ரந்தாவு பஞ்சாங் எல்லையில் பயணிகள் நடமாட்டம் சரிவு
தற்போதைய செய்திகள்

தென் தாய்லாந்தில் பதற்ற நிலை: ரந்தாவு பஞ்சாங் எல்லையில் பயணிகள் நடமாட்டம் சரிவு

Share:

கடந்த வாரம், தாய்லாந்தின் தென் பகுதிகளில் மூன்று மாநிலங்களில் நடந்த குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு மற்றும் கட்டிடங்களுக்கு தீவைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, ரந்தாவு பஞ்சாங் குடிநுழைவு எல்லையில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரந்தாவு பஞ்சாங் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் தளபதி சித்தி கதீஜா ஹம்ஸா கூறுகையில், சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மலேசியாவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை 3,298 ஆக பதிவாகியுள்ளது.

அதே காலகட்டத்தில் மலேசியாவிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2,969 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் தென் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக, எல்லைப் பகுதி வழியாக பயணிக்கும் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News