Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் சட்டவிரோத மோட்டார்  பந்தயம்: செந்துலில் 3 ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் சட்டவிரோத மோட்டார் பந்தயம்: செந்துலில் 3 ஆடவர்கள் கைது

Share:

ஜோகூர் லிங்கெடுவா விரைவுச்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடந்ததாக சமூக ஊடகங்களில் வைரலான காணொளி தொடர்பாக மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி வெளியிட்டுள்ள தகவலில், 20 முதல் 40 வயதிற்குட்பட்ட மூன்று சந்தேகநபர்கள், அத்துறையின் புலனாய்வு மற்றும் நடவடிக்கை பிரிவு மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் Sentul பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் சுற்றிவளைத்த போது மூன்று சந்தேகநபர்களும் தப்பியோட முயன்றதாகவும், எனினும் போலீஸ் குழுவினர் அவர்களை வெற்றிகரமாக மடக்கிப் பிடித்ததாகவும் முஹம்மது ஹஸ்புல்லா அலி தெரிவித்துள்ளார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி