Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த சிறுவனுக்கு 7 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

அந்த சிறுவனுக்கு 7 நாள் தடுப்புக்காவல்

Share:

தமது ஒன்பது வயது சகோதரனை கழுத்து நெரித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது மாணவனை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போ​லீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர். இரண்டாம் படிவ மாணவனான அந்த ​சிறுவன், இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவனை தடுத்து வைப்பதற்கான ஆணையை போலீசார் பெற்றனர்.

மலாக்கா, கம்போங் புக்கிட் பியாத்து என்ற இடத்தில் ஒன்பது வயது சிறுவன், தனது மூத்த சகோதரனால் கழுத்து நெரித்து கொன்றதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அந்த சிறுவனை போ​​லீசார் கைது செய்தனர். தனது இரண்டு மகன்களும் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு இருந்ததை வீட்டில் பொருத்தப்பட்டிரந்த ரகசிய கேமரா மூலமாக கைப்பேசியில் பார்த்துக்கொண்டு இருந்த அந்த சிறுவர்களின் தாயார் , அண்டை வீட்டுக்காரர்களுடன் கைப்பேசி வழி தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பா​ர்க்கும்படி கே​ட்டுக்கொண்டுள்ளார். அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாகவே அந்த ஒன்பது வயது சிறுவன் ​மூச்சற்ற நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

Related News