நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளமான கேமரன்மலையில் 48 கோடி வெள்ளி செலவில் ஹபு விற்கும் தானா ரதா விற்கும் இடையில் புதிய சாலையை நிர்மாணிக்கும் உத்தேசத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த புதிய சாலையை நிர்மாணிக்கும் திட்டமானது, கேமரன்மலையில் நிலவி வரும் சாலைபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையாது என்று ரீச் எனப்படும் கேமரன்மலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் ஏ. திலீப் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.
ஹபு விற்கும்தானா ரதா விற்கும் இடையில் புதிய சாலை நிர்மாணிக்கும் உத்தேசத் திட்டம் எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ளாமலும், பொது மக்களின் கருத்துக்களை கண்டறியாமலும் கண்மூடித்தனமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக திலீப் மார்ட்டின் குற்றஞ்சாட்டினார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஹபு - தானா ரதா சாலை, போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் அல்ல. மாறாக, கீ ஃபாஹ்ம் மில் கடுமையாகி வரும் போதுமான வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாததே இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முக்கிய காரணமாகும் என்று திலீப் மார்ட்டின் சுட்டிக்காட்டினார்.
எனவே கீ ஃபாஹ்ம் மில் நிலவி வரும் கார் நிறுத்தும் பிரச்னைக்கு முதலில் அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கத்தை திலீப் மார்ட்டின் கேட்டுக்கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


