ஜார்ஜ்டவுன், நவம்பர்.19-
நில வரியைச் செலுத்தத் தவறிதற்காக பினாங்கு மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 413 லாட் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
நில வரி கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அது குறித்து அவர்கள் அக்கறை கொள்ளாத காரணத்தினால் 413 லாட் நிலங்களின் உரிமத்தை மாநில அரசாங்கம் எடுத்துக் கொண்டதாக இன்று பினாங்கு சட்டமன்றத்தில் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் மேல்முறையீட்டு நடைமுறை தொடர்பில் பாஸ் கட்சியின் Pinang Tunggal சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.








