மலேசிய ஹாக்கி உலகின் புகழ்பெற்ற முன்னாள் நட்சத்திர வீரரும் பயிற்சியாளருமான சர்ஜித் சிங், தனது 63-ஆவது வயதில் காலமானார்.
கடுமையான உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1984 இல், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் 1992 இல் பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்த சர்ஜித் சிங், தேசிய அணியின் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
விளையாட்டு வாழ்க்கைக்குப் பின்னரும் தேசிய ஹாக்கி அணியின் பயிற்றுநாராக இருந்து மலேசிய ஹாக்கி வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்தார்.
மலேசிய ஹாக்கிக்கு அளப்பரிய சேவை செய்த சர்ஜித் சிங்கின் மறைவு, விளையாட்டு உலகிற்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.








