Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கோல கிராய் வீட்டில் 5 வகையான துப்பாக்கிகள் பறிமுதல் - பெண் கைது
தற்போதைய செய்திகள்

கோல கிராய் வீட்டில் 5 வகையான துப்பாக்கிகள் பறிமுதல் - பெண் கைது

Share:

கோல கிராய் அருகிலுள்ள கம்பூங் மியாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து பல்வேறு வகையான ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

"ஓப்ஸ் பெர்செபாடு கசானா" நடவடிக்கையின் கீழ் நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தென்கிழக்கு பிரிவு பொதுச் செயல்பாட்டு படை தளபதி அமாட் ராட்ஸி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சோதனையில், 8-ஆம் படையணி, கிளந்தான் வனத்துறை மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை ஆகியவை இணைந்து செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு உடல் உறுப்புகள் சேமிப்பு தொடர்பான தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News