Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஆசியான்: 9,000க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.24-

ஆசியான் 2025 மாநாட்டின் போது பாதுகாப்புக்காகவும் அமைதியை பராமரிக்கவும் 9000க்கும் மேற்பட்ட கோலாலம்பூர் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா குறிப்பிட்டார். ஏப்ரல், மே, அக்டோபர் மாதங்களில் தலைநகரிலும் புத்ராஜெயாவிலும் 186 கூட்டங்கள் நடைபெற உள்ளன. வெளிநாட்டு தூதர்கள் மட்டும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் புக்கிட் அமான் காவல் துறைத் தலைமையகத்தின் உதவியையும் போக்குவரத்து காவல்துறையின் உதவியையும் பெறப்படும் என தெரிவித்தார்.

வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொள்ளும் ஆசியான் மாநாடு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில் மலேசிய காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கோலாலம்பூர் நகரம் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பார்வையாளர்களும் தூதர்களுக்கும் எந்தவித கவலையும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →