Sep 27, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் பயங்கரம்: பிரேக் பிடிக்காததால் 5 வாகனங்கள் மீது மோதிய ட்ரெய்லர்
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் பயங்கரம்: பிரேக் பிடிக்காததால் 5 வாகனங்கள் மீது மோதிய ட்ரெய்லர்

Share:

குவாந்தான் - கெபெங் புறவழிச்சாலையில் இன்று காலை 11 மணியளவில் ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

முன்னால் விபத்து ஒன்று நடந்ததால் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு டிரெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நின்றிருந்த ஹோண்டா சிட்டி, டொயோட்டா வேன், மைவி மற்றும் மற்றொரு ட்ரெய்லர் மீது அடுத்தடுத்து மோதியது.

டிரெய்லரின் பிரேக் சரியாகச் செயல்படாததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 36 வயதுடைய வேன் ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார்; மற்ற நான்கு ஓட்டுநர்களும் காயமின்றி உயிர் பிழைத்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்