சுங்கை பட்டாணி, டிசம்பர்.08-
இடைநிலைப்பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவரைத் துன்புறுத்திக் காயம் விளைவித்ததாக நம்பப்படும் இரண்டு மாணவர்கள் தங்களுக்கு எதிரான குற்றத்தை சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒப்பினர்.
16 மற்றும் 17 வயதுடைய அந்த இரண்டு மாணவர்கள், மாஜிஸ்திரேட் முகமட் பஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் 17 வயது மாணவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கி காயம் விளைவித்ததாக அந்த இரு மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இரு மாணவர்களும் குற்றத்தை ஒப்பியதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அதுவரை இருவரையும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.








