Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நோபல் அமைதிப் பரிசை வென்ற அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் மலேசிய முன்னோடி காலமானார்
தற்போதைய செய்திகள்

நோபல் அமைதிப் பரிசை வென்ற அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் மலேசிய முன்னோடி காலமானார்

Share:

மலேசிய மகப்பேறு மருத்துவரும், அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகளாவிய பிரசாரகருமான Datuk Dr Ronald McCoy , தனது 96 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவை அவரது மகன் ஸ்டீவன் மெக்காய் உறுதிப்படுத்தியுள்ளார்.

1930ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான், சிரம்பானில் பிறந்த டாக்டர் ரொனால்ட், 2005ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான உலகளாவிய இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார்.

அவர் பங்கேற்ற International Campaign to Abolish Nuclear Weapons – ICAN இயக்கம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் நூற்றுக்கணக்கான அரசு சாரா அமைப்புகளை ஒன்றிணைத்தது.

2017ஆம் ஆண்டு, அணு ஆயுதங்களால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகள் குறித்து உலகின் கவனத்தை ஈர்த்ததற்காக ICAN-க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தை உருவாக்கிய பிரசாரத்திலும் ICAN முக்கியப் பங்காற்றியது.

டாக்டர் ரொனால்ட், 1965ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயா, அசுந்தா மருத்துவமனையில் மருத்துவ ஆலோசகராகப் பணியில் சேர்ந்ததுடன், பின்னர் பந்தாய் மருத்துவ மையத்திலும் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டு மருத்துவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவரது இறுதி அஞ்சலி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்