Sep 2, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் வரவேற்பை நேரில் காணவே வந்தேன்” – துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

மக்களின் வரவேற்பை நேரில் காணவே வந்தேன்” – துன் மகாதீர்

Share:

2026 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் மக்கள் எவ்வாறு பங்கேற்கின்றனர் என்பதை நேரில் பார்ப்பதற்காகவே புத்ராஜெயாவில் நடைபெற்ற மெர்டேக்கா அணிவகுப்பில் கலந்துகொண்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் 101 வயதான துன் மகாதீர், மின்சார சக்கர நாற்காலியில் டத்தாரான் புத்ராஜெயாவுக்கு வந்திருந்தார்.

அங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதைத் தாம் பார்த்ததாக அவர் கூறினார்.

இளைஞர்களுக்கு நாட்டின் சுதந்திரத்தில் ஆர்வம் இல்லை என்ற கூற்று உண்மையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மலாய், சீனர் மற்றும் இந்திய இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் தேசிய தினத்தைக் கொண்டாடுவதைத் தாம் நேரில் பார்த்ததாகவும், அவர்கள் சுதந்திரம் கிடைத்த புதிதில் இருந்ததைப் போன்ற உற்சாகத்துடன் காணப்பட்டதாகவும் துன் மகாதீர் கூறினார்.

நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, தேசத்தை வலுவாக நிலைநிறுத்துவதற்கு இளைஞர்களிடையே தேசப்பற்று உணர்வு மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நாம் நேசிக்கும் நாட்டைப் பாதுகாப்பதைவிட உயர்ந்தது எதுவும் இல்லை” என்றும் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Related News