Sep 2, 2026
Thisaigal NewsYouTube
சோலார் திட்ட ஊழல் வழக்கு: ரோஸ்மாவுக்கு கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய அனுமதி
தற்போதைய செய்திகள்

சோலார் திட்ட ஊழல் வழக்கு: ரோஸ்மாவுக்கு கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய அனுமதி

Share:

1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சரவாக் சூரியசக்தி திட்ட ஊழல் வழக்கில், தமக்கு எதிரான குற்றத் தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

டத்தோ அசாஹாரி கமால் ரம்லி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த அனுமதியை வழங்கியது.

கூடுதல் ஆதாரமானது, இவ்வழக்கில் 16ஆவது அரசுத் தரப்பு சாட்சியான Rayyan Radzwill Abdullah - விடம் இருந்து பெறப்பட வேண்டும் என்றும், இதற்காக அவர் மீண்டும் குறுக்கு விசாரணை மற்றும் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது அரசுத் தரப்பினரால் தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ரய்யான் கூறியதாகவும், அவரது சாட்சியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் ஆவணங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதில் போலீஸ் அறிக்கை, சட்டப்பூர்வ உறுதிமொழி மற்றும் ஆதார ஆவணங்கள் அடங்கும்.

Related News