Sep 2, 2026
Thisaigal NewsYouTube
60 ஆண்டுகள் பழமையான தேசிய நினைவுச் சின்னம் – அடுத்த வாரம் முதல் புனரமைப்பு
தற்போதைய செய்திகள்

60 ஆண்டுகள் பழமையான தேசிய நினைவுச் சின்னம் – அடுத்த வாரம் முதல் புனரமைப்பு

Share:

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தேசிய நினைவுச் சின்னமான Tugu Negaraவின் புனரமைப்புப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளன.

முதற்கட்டமாக நினைவுச் சின்னத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு, மேற்பரப்பு பரிசோதனை மற்றும் கட்டமைப்பின் உறுதித்தன்மை சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும் என மலேசியா கிளந்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டத்தோ பேராசிரியர் டாக்டர் அர்ஹாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டிய புனரமைப்புப் பணிகளின் அளவு தீர்மானிக்கப்படும்.

புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் 12 மாதங்களுக்குள், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னதாக முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News