ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் அண்மையில் கிள்ளானில் நடைபெற்ற “புதிய விடியலை நோக்கி நாம்” எனும் அரசு சாரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் கஹாங் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மஇகாவிற்கு எதிர்ப்பாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், நிகழ்ச்சியில் உரையாற்றியது மூலம் ரமேஸ், கட்சியின் அமைப்புச்சட்டத்தை மீறி விட்டார் என்று கூறி அவருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் காரணம் கோரும் கடிதத்தை அனுப்பிருந்ததுடன் அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து இருந்தது. எனினும் விசாரணையில் கலந்து கொள்ள தவறியதற்காக ரமேஷ் கட்சியிலிருந்த இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.








