Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் நகராண்மை கழகத்தின் 25 ஆண்டு வெள்ளி விழா: சாதனைப் பாதையில் ஒரு கால் நூற்றாண்டு
தற்போதைய செய்திகள்

கூலிம் நகராண்மை கழகத்தின் 25 ஆண்டு வெள்ளி விழா: சாதனைப் பாதையில் ஒரு கால் நூற்றாண்டு

Share:

கடந்த 25 ஆண்டுகளில் கெடா, கூலிம் மாவட்டம் கண்டுள்ள அசுர வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் வலுசேர்த்துள்ளதாக கெடா மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹஜி நொரிஜான் பின் கஜாலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இன்று கூலிம் டத்தாரான் புத்ராவில் இநடைபெற்ற நகராண்மை கழகத்தின் வெள்ளி விழா மற்றும் "KULIM URBAN COMMUNITY FIESTA 2026" நிகழ்வை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

'கூலிம் ஹய்-டெக் பார்க்' நாட்டின் பொருளாதார அடித்தளமாக விளங்குவதை ஹஜி நொரிஜான் தமது ஊரையில் சுட்டிக்காட்டினார். சிக்கனமான முறையில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த விழாவை ஏற்பாடு செய்த நகராண்மை கழகத்தைப் பாராட்டிய அவர், மாவட்டத்தின் வெற்றிக்கு மக்களின் ஒற்றுமையே காரணம் என்றார்.

இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற 88 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டப் போட்டியில் 202 போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய டத்தோ ஸ்ரீ நொரிஜான், இந்த நிகழ்விற்கு ஆதரவு வழங்கிய உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு இலாகாவிற்கு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் கூலிம் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ ஹஜி ஹெல்மி பின் யூசோப் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை